இலங்கையை இரண்டு நாடுகளாக பிரிக்க வேண்டும்! பிரித்தானிய அரசியல் கட்சியின் அறிவிப்பு!

இலங்கையை இரண்டு நாடுகளாக பிரிக்க வேண்டும் என பிரித்தானியாவின் கன்சர்வேட்டிவ் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் விளக்கம் கோரி பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவருக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய நிர்வாக கட்சியின் கொள்கை பிரகடனத்தில் இவ்வாறான விடயம் அடங்குகின்றமை ஏற்றுக் கொள்ள முடியாது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இதற்கு முன்னதாக பிரித்தானியாவின் எந்தவொரு அரசியல கட்சியும் இது போன்ற நிலைப்பாடொன்றை வெளிப்படுத்தவில்லை.

இதன்மூலம் இலங்கைக்கு எதிராக செயற்படும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் சில அடிப்படைவாதிகளுக்கு உந்துசக்தி கிடைக்க பெறும் என பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க :   கொழும்பு நிதி நகர ஒப்பந்தத்தில் அரசாங்கம் கைச்சாத்திட்டது

Related Posts

About The Author

Add Comment