பிளாஸ்டிக்கை உணவாகக் கொள்ளும் பக்டீரியாக கண்டுபிடிப்பு

உலகளவில் ஆண்டுதோறும் 300 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஆனால் இவற்றில் சொற்ப அளவானவை மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுவதுடன், எஞ்சியவை சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் கழிவாகவே மாறுகின்றன.

இதற்கு பிரதான காரணம் இவை உக்கும் தன்மை அற்றவையாக காணப்படுகின்றமை ஆகும்.

ஆனால் தற்போது பல்பகுதியங்களால் (Polymer) ஆக்கப்படும் இந்த பிளாஸ்டிக்குகளை உணவாகக் கொள்ளக்கூடிய பக்டீரியாக்களை ஜப்பானில் உள்ள Kyoto பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது Ideonella sakaiensis எனும் பக்டீரியாக தனது நொதியத்தினை பல்பகுதியமான பிளாஸடிக்கினுள் செலுத்தி அதன் பிணைப்புக்களை உடைப்பதன் மூலம் ஒரு பகுதியங்களாக மாற்றுகின்றன என அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் காரணமாக எதிர்காலத்தில் பிளாஸ்டிக்கினையும் உக்கச் செய்ய முடியும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க :   காகிதத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒன்றை டிஜிட்டல் வடிவில் பீ.டீ.எப் ஆக​ மாற்றுவது எப்படி?

Related Posts

About The Author

Add Comment