ததேகூவின் மே தினப் பேரணி யாழில்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தொழிலாளர்கள் தினம் இன்று யாழ் இணுவில் கந்தசாமி ஆலய முன்றலில் இருந்து பேரணியான ஆரம்பமானது.

இந்த பேரணி யாழ் மருதனார் மடம் சென்று, அங்கிருந்து யாழ் இராமநாதன் கல்லூரியின் மைதானத்திற்கு வந்து அங்கு மேதின கூட்டம் இடம்பெற்றது.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதில் உழவர்களின் மாட்டு வண்டி மூலமான தொழிலாளர்களின் ஊர்வலம், தொழிலாளர் வர்க்கத்தினரை பிரதி பலிக்கும் வகையிலான கலை, கலாசார ஊர்வலங்கள், தொழிலாளர்களின் சிறப்புக்களையும் கொண்டுள்ள வாகனங்களின் பேரணி என, பல விடயங்கள் இருந்தன.

இந்த நிகழ்வில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், த.சித்தார்தன் மற்றும் வட மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்க :   பெற்றோலுக்காக அங்கலாய்க்கும் நாட்டு மக்கள்

Related Posts

About The Author

Add Comment