இதுவரையில் 175 சட்டவிரோத ஆயுதங்கள் ஒப்படைப்பு

சட்டவிரோத ஆயுதங்களை கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலப் பகுதியினுள் இதுவரை 175 ஆயுதங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜெயவீர தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (04) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக கடந்த 25 ஆம் திகதி முதல் மே 6 ஆம் திகதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இக்காலக்கெடு முடிவடைய இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இற்றை வரை சுமார் 175 ஆயுதங்கள் கையளிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். அதிகளவான ஆயுதங்கள் கம்பஹா மாவட்டத்திலிருந்தே ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் ரீ-56 ரக ஆயுதங்களை கையளிப்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாவும், பிஸ்டல்/ரிவால்வர்களை கையளிப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாவும், சன்னத்துப்பாக்கி அல்லது அதற்கு சமமான ஆயுதங்களை (கல்கடஸ்/கட்டுத்துபாக்கி ) கையளிப்பவர்களுக்கு 5000 ரூபாவும் வழங்கப்படுகிறது. எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி முடிவடையவுள்ள இப்பொது மன்னிப்புக் காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் தம் வசம் வைத்திருக்கும் ஆயுதங்களை அண்மையிலுள்ள பொலிஸ் நிலையம், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகத்தில் கையளிக்க முடியும்.

மன்னிப்பு காலப்பகுதிக்குள் சட்டவிரோத ஆயுதங்களை கையளிப்பவர்களுக்கு தண்டனை வழங்கப்படவோ அல்லது தண்டப் பணம் அறவிடப்படவோ மாட்டாது என அனைத்து பொதுமக்களுக்கும் அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

[b]BPK[/b]

இதையும் படியுங்க :   இலங்கையில் முதன் முறையாக SOLAS செயற்றிட்டம் நடைமுறை

Related Posts

About The Author

Add Comment