இடைநிறுத்தப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் மீண்டும் விரைவில் ஆரம்பிக்கப்படும்

பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள முதலீட்டு வேலைத் திட்டங்களை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்ககை எடுப்பதாக சர்வதேச வர்த்தகத்துறை இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவின் ஆலோசனைக்கமைய அது நடைமுறைப்படுத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

முதலீட்டு கருத்துக்களம் ஒன்றின் ஊடாக அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்று சர்வதேச வர்த்தகத்துறை இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச மற்றும் மாகாண நிறுவனங்களின் அதிகாரிகளை ஒரே இடத்திற்கு அழைத்து ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்த்து, குறித்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் அந்தக் கருத்துக்களத்தினூடாக மேற்கொள்ளப்பட உள்ளது.

சுற்றுலா, விவசாயம், கைத்தொழில், மின் உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு துறைகளில் வேலைத்திட்டங்கள் இந்தக் கருத்துக்களத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்க :   இலஞ்சம் பெற்ற அதிகாரி வசமாக சிக்கினார்

Related Posts

About The Author

Add Comment