இங்கிலாந்து அணியின் முதலாவது இன்னிங்ஸ் நிறைவு

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்ததுள்ளது.

அதன்படி முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 416 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஜெனி பேர்ஸ்டோவ் 167 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இலங்கை சார்பாக ரங்கன ஹேரத் 81 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையிலேயே இப்போட்டி இடம்பெறுகின்றது.

இதையும் படியுங்க :   பாகிஸ்தான் 06 விக்கட்டுக்களால் வெற்றி

Related Posts

About The Author

Add Comment