காதலுக்காக தந்தையை கொலை செய்த மகள்!!

கோவை சொக்கம்புதூரை சேர்ந்தவர் நாகராஜன் விவசாயி, இவர் சாய ஆலைகளுக்கு தேவையான வேதிப்பொருட்களை வினியோகம் செய்து வந்துள்ளார்.‪#‎lka‬ ‪#‎SriLanka‬

இவர் நெகமம் அருகே உள்ள தேவணாம்பாளை தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வந்துள்ளார்.

கடந்த 23 ஆம் திகதி இரவு தோட்டத்துக்கு சென்ற நாகராஜ் மறுநாள் கப்பளாங்கரை வீதியில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நாகராஜை அவரது மகள் மகாலெட்சுமி தனது காதலன் சதீசுடன் சேர்ந்து கொலை செய்துள்ளதாக அறியவந்துள்ளது.

காவற்துறை தேடுவதை அறிந்த மகாலட்சுமி, காதலன் சதீசுடன் நேற்று கோவை நீதி மன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

பின்னர் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொலையுடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

கொலை தொடர்பாக தனிப்படை காவற்துறை கூறியதாவது:-

" நாகராஜின் மகள் மகாலட்சுமி 2 வருடமாக சதீசை காதலித்து வந்துள்ளார்.

இதை அறிந்த நாகராஜ் கண்டிதுள்ளார்.

ஆனாலும் மகாலட்சுமி தொடர்ந்து காதலனுடன் சுற்றினார்.

மகளின் காதலுக்கு அவரது தாய் பிரமிளா ஆதரவு தெரிவித்துள்ளதுடன் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து நாகராஜ் தன்பேச்சை கேட்காத மனைவி, மகளை வீட்டை விட்டு துரத்தி விட்டுள்ளார்.

உடனே சதீஷ் மலுமிச்சம்பட்டியில் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு காதலியையும், அவரது தாயையும் தங்க வைத்தார்.

அப்போது மகாலட்சுமி தனது காதலனிடம் எனது தந்தை உயிரோடு இருந்தால் நம்மை நிம்மதியாக வாழ விட மாட்டார், சொத்துக்களும் தர மாட்டார், எனவே எனது தந்தையை கொலை செய்து விடு என காதலனிடம் கூறி உள்ளார்.

நகைகளை வைத்து ரூ.1½ லட்சம் தருகிறேன், நீ ஆட்களை வைத்து எனது தந்தையை கொலை செய்து விடு என மகாலட்சுமி கூறி உள்ளார்.

அதன்படி சதீஷ் தனது நண்பர்கள் மூலமாக நாகராஜை கொலை செய்ய திட்டம் தீட்டினார், சம்பவத்தன்று தோட்டத்துக்கு தனியாக சென்ற நாகராஜை சதீசும், அவரது நண்பர்களும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்" என தனிப்படை காவற்துறை கூரியது.

இதையும் படியுங்க :   சிதைந்து போன அழகிய குடும்பம்! இந்தியாவில் மனைவி, 3 குழந்தைகளை கொன்று விட்டு வியாபாரி தற்கொலை

Related Posts

About The Author

Add Comment