பிரிட்டனில் கடந்த ஆண்டில் 3,000க்கும் மேற்பட்ட சிறார் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்

கடந்த ஆண்டில் 3,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீதான இணைய வழிப் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் போலிசார் தெரிவித்துள்ளனர்.

இவை குழந்தைகளை இலக்காக வைத்து துஷ்பிரயோகம் செய்பவர்களால் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.
இதில் நூற்றுக்கும் அதிகமான பாலியல் வல்லுறவு வழக்குகளாகும். மற்றவை பாலியல் தாக்குதல், குழந்தைகளை பாலியலில் உறவில் ஈடுபடுத்த தயார் செய்வது, பாலியல் நடவடிக்கைகளில் குழந்தைகளை பங்கேற்க வைக்கத் தூண்டுவது போன்ற குற்றங்கள் என தெரியவந்துள்ளது.

இந்த புள்ளிவிவரங்களைக் கண்ட , பிரிட்டனின் குழந்தைகளுக்கான தொண்டு அமைப்பான , என்.எஸ்.பி.சி.சி , இவற்றில் 270க்கும் மேற்பட்ட குற்றங்கள் 10 வயதிற்கும் குறைவான குழந்தைகள் மீது செய்யப்பட்டவை என்றும், இதில் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு ஒரே ஒரு வயதுதான் ஆகியிருந்ததாகவும் கூறுகிறது.

இதையும் படியுங்க :   11 குர்திய போராளிகள் கொலை: இரானிய ராணுவம் அறிவிப்பு

Related Posts

About The Author

Add Comment