ஜிகா வைரஸ் பாதிப்பு: லத்தீன் அமெரிக்காவில் அதிகரிக்கும் கருக்கலைப்புகள்

கடந்த நவம்பரில் முதல் ஜிகா வைரஸ் எச்சரிக்கை வெளியிடப்பட்ட பின்னர், பிரேசில் மற்றும் ஈக்வடோர் நாடுகளில், கருக்கலைப்பு மாத்திரைகள் வேண்டி வரும் ஆன்லைன் வேண்டுகோள்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்
எல் சல்வடோர், கோஸ்டா ரிகா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில் இந்த எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.
கருவுற்ற பெண்களுக்கு, தீவிர வளர்ச்சிப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் சிறு தலை, குறைந்த மூளை வளர்ச்சி ஆகிய பாதிப்புக்களை ஏற்படுத்தும் ஜிகா வைரஸ் தொற்றினால் 1400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
லத்தீன் அமெரிக்காவில் பெரும்பாலும் கருக்கலைப்பு என்பது சட்டவிரோதமானது அல்லது கடும் கட்டுப்பாடுகள் கொண்டது.

இதையும் படியுங்க :   நைஜீரியாவில் வெளிநாட்டு ஊழியர்கள் 7 பேர் கடத்தல்

Related Posts

About The Author

Add Comment