ஒன்றாக இருந்து மது அருந்திய கணவன் மனைவி..!- போதையில் மனைவியை திருவலையால் குத்திய கணவன் – இலங்கையில் …

திருகோணமலை -பன்குளம் பகுதியில் கணவன் மனைவியை திருவலை குற்றியினால் தாக்கி தலையில் பாரிய காயம் ஏற்பட்ட நிலையில் மஹாதிவுல்வெவ கிராமிய வைத்தியசாலையில் நேற்றிரவு (22) அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காயங்களுக்குள்ளானவர் திருகோணமலை-பன்குளம் பகுதியைச்சேர்ந்த எஸ்.தங்கம்மா (54 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கணவரும் மனைவியும் ஒன்றாக மது அருந்திக்கொண்டிருக்கும் போது வாக்குவாதம் கைகலப்பாக மாறியதினாலேயே தலையில் திருவலை குற்றியினால் தாக்கியதாக பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

தாக்குதல் நடாத்திய கணவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணை மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் குறித்து மொறவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்க :   சம்பூரில் அனல் மின்நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதியில்

Related Posts

About The Author

Add Comment