கைத்துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

திருகோணமலை, கந்தளாய் தலைமை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரொருவரின் கைத்துப்பாக்கி வெடித்ததில், அதே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, கந்தளாய் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று வியாழக்கிழமை (23) இடம்பெற்ற இச்சம்பவத்தில், கல்லோயா பகுதியைச் டீ.ஜீ. தல்தாகல (வயது42) என்ற கான்ஸ்டபிளே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வெளிக் கடமைக்கு செல்வதற்காக, பொலிஸார் இருவரும் பதிவேட்டில் கையெழுத்து இட்டுக் கொண்டிருந்த போது, பொலிஸ் உத்தியோகத்தரின் இடுப்பிலிருந்த கைத்துப்பாக்கி வெடித்ததில், அருகிலிருந்த கான்ஸ்டபிளின் இடுப்பில் தோட்டா பாய்ந்துள்ளது.

படுகாயமடைந்த அவர், கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், பகல் 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படியுங்க :   குமாரபுரம் படுகொலை சந்தேகநபர்களுக்கு மரணதண்டனை வழங்க கோரிக்கை

Related Posts

About The Author

Add Comment