பண்டாரவளையில் உள்நாட்டு விமான நிலையம் அமைக்க அனுமதி

பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை பிரதேசத்தில் உள்நாட்டு விமான நிலையம் ஒன்றினை அமைப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

கொழும்பிலிருந்து பதுளைக்கு தரை மார்க்கமாக பயணிக்க 06 மணித்தியாலயங்கள் செலவாகின்றன. அந்த தூரத்தை வான் மார்க்கமாக 25 நிமிடங்களில் பயணிக்கலாம்.

மேலும் வான் போக்குவரத்து மூலம் சுற்றுலாத்துறையையும் விருத்தி செய்து கொள்ளலாம்.

இதன் காரணமாக பதுளை மாவட்டத்தில் உள்நாட்டு விமான நிலையம் ஒன்றினை அமைப்பது மிகவும் பயன்மிக்கதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வகையில் பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை பிரதேசத்தில் உள்நாட்டு விமான நிலையம் ஒன்றினை நிறுவ போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க :   மாணவர் பேரணி மீது கண்ணீர்ப் புகை, நீர்த்தாரைப் பிரயோகம்

Related Posts

About The Author

Add Comment