ஒன்றரைக் கோடி ரூபா பெறுமதியான கஞ்சா மீட்பு

மன்னார் – சிலாவத்துறை கடற்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 140 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபாய் எனத் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட குறித்த கஞ்சாவை சிலாவத்துறை கடற்பகுதியில் மறைத்து வைத்து விட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க :   கொத்து குண்டு விவகாரம் - உரிய பதிலளிக்காத இலங்கை அதிகாரிகள்

Related Posts

About The Author

Add Comment