பொலிஸ் மா அதிபர் பற்றி வௌியே வந்து சொல்கிறேன்! நாமல் ஆவேசம்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவர் இன்று நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, வாக்குமூலம் அளிக்க உள்ளே செல்லும் போது, பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகள் தொடர்பில் தான் வௌியே வந்து தெரிவிப்பதாக நாமல் கூறிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, றக்பி விளையாட்டுக்காக வழங்கப்பட்டதாக கூறப்படும் 70 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலும், நாமலுக்கு எதிராக நிதி குற்ற விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க :   சீரற்ற காலநிலை - இதுவரை 92 பேர் பலி

Related Posts

About The Author

Add Comment