யாழில் சிகிச்கைக்குச் சென்றவர் வைத்தியசாலையில் வழுக்கிவிழுந்து உயிரைவிட்ட பரிதாபம்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தரொருவர் நேற்று வழுக்கி விழுந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது நேற்றையதினம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாதாந்த கிளினிக்குக்காக மருந்து பெறச் சென்ற குறித்த குடும்பஸ்தருக்கு வைத்தியப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அவரை வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுமாறும் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கமைய வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் குறித்த குடும்பஸ்தர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை வைத்தியசாலையின் கழிப்பறைக்குச் சென்ற போது வழுக்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு நோயாளர் விடுதியிலுள்ள கட்டிலில் கொண்டு சென்று சேர்ப்பித்த போது திடீரென மார டைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

புன்னாலைக்கட்டுவன் வடக்குப் பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் வாகீசன் (வயது-42) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதையும் படியுங்க :   யாழில் அவுஸ்ரேலிய தூதுவர்

Related Posts

About The Author

Add Comment