யாழில் பெண்களின் உள்ளாடையால் தாக்கப்பட்ட இளைஞர்கள்-வேடிக்கை பார்த்த குரங்குகள் !

தோய்த்து வீட்டு விறாந்தையில் கயிற்றில் உலருவதற்காக போட்டிருந்த யுவதியின் உள்ளாடையை குரங்குகள் எடுத்துச் சென்று அயல் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த வீடு ஒன்றினுள் போட்டுவிட்டுச் சென்றுள்ளது,

வீட்டில் காயப் போட்டிருந்த உள்ளாடை காணாமல் போனதால் குறித்த யுவதி அயல் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த வீட்டில் கட்டட வேலை செய்யும் இளைஞர்கள் மீது சந்தேகம் கொண்டிருந்தார்.

இந் நிலையில் குறித்த வீட்டுக்கு கட்டட வேலை செய்வதற்கு அன்று காலை வந்த இளைஞன் அறைக்குள் பெண்களின் உள்ளாடைகள் கிடப்பதைப் பார்த்துவிட்டு அந்த உள்ளாடைகளை அங்கிருந்த தடி ஒன்றின் மூலம் துாக்கிச் சென்று வெளியே எறிந்துள்ளார்.

இதன் பின்னர் குறித்த வீட்டுக்கு வந்த ஏனைய இரு கட்டடத் தொழிலாளர்களும் குறித்த உள்ளாடைகள் அங்கு எப்படி வந்தது என்பது தொடர்பில் ஆராய்சியில் ஈடுபட்டு அந்த உள்ளாடைகளை தடியால் துாக்கி வைத்து ஆராய்ந்ததுடன் பெரிதாக சத்தப் போட்டு சிரித்ததாகவும் தெரியவருகின்றது.

இளைஞர்களின் செயற்பாட்டை கண்ணுற்ற யுவதியும் உறவினர்களும் இளைஞர்களே குறித்த உள்ளாடைகளை எடுத்ததாக சந்தேகப்பட்டு அயலவர்களுடன் சேர்ந்து இளைஞர்களை தாக்கியுள்ளனர்.

அத்துடன் பொலிசாருக்கும் தகவல் கொடுக்க முற்பட்டுள்ளனர். அப்பாவியான தாங்கள் தாக்கப்பட்டது குறித்த குறித்த இளைஞர்கள் வீட்டு உரிமையாளருக்கு அறிவித்த போது அங்கு விரைந்து சென்றுள்ளார் வீட்டு உரிமையாளர்.

அந் நேரத்தில் அப்பகுதிக்கு கூட்டமாக வந்த குரங்குகளின் கையில் இன்னொரு வீட்டில் காயப் போட்டிருந்த சட்டைகள் பாவாடைகள் இருந்துள்ளது.

இதனைக் கண்ணுற்ற அயலவர்கள் நிலமையை உணர்ந்துள்ளனர். அத்துடன் வீட்டு உரிமையாளரும் இது தொடர்பாக சுட்டிக் காட்டி இளைஞர்களைத் தாக்கியவர்களை கடுமையாக ஏசியதுடன பொலிசாரிடம் முறையிடப் போவதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து கட்டடத் தொழிலாளிகளான இளைஞர்களைத் தாக்கியவர்கள் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டதாக தெரியவருகின்றது.

குரங்குச் சேட்டைகளால் தென்மராட்சி அதிர்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்க :   யாழில் ஜனாதிபதியை சந்திக்க பாதுகாப்பு பிரிவுடன் கைகலப்பில் ஈடுபட்ட நபர் யார்?

Related Posts

About The Author

Add Comment