நியூஸிலாந்து வீரர்களை எச்சரித்த வெட்டோரி! இவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்

ஐசிசி இணையத்தளத்திற்காக நியூஸிலாந்து அணியின் முன்னாள் அணித் தலைவர் வெட்டோரி எழுதியுள்ள கட்டுரையில் இந்திய அணியை வெல்வது, அதன் பலம், பலவீனம் குறித்து அலசியுள்ளார்.

இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கிண்ணம் தொடரில் இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், நாளை தனது அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் மோத உள்ளது.

இந்த நிலையிலேயே நியூசிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் வெட்டோரி இந்திய அணியை வெல்வது, அதன் பலம், பலவீனம் குறித்து பேசியுள்ளார்.

அதில், இந்திய அணி இப்போது இருக்கும் நிலையில், மிகப்பெரிய ஸ்கோரை அவர்களுக்கு இலக்காக நிர்ணயிப்பதுதான் நியூஸிலாந்து அணிக்கு பாதுகாப்பு.

அதுபோல ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு எதிரணி வீரர்களால் விளையாட முடியாத அளவுக்கு இருக்கிறது.

அனைத்து துடுப்பாட்ட வீரர்களும் திணறுகிறார்கள். பும்ரா பந்துவீச்சை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

அதேபோல டெத் ஓவர்களில் ஷமியின் பந்துவீச்சு அற்புதமாக இருக்கிறது. மேலும் ஹர்திக் பாண்டியா, ரிஷப்பந்த் ஆகியோர் சுழற்பந்துவீச்சை கையாளும் விதம் அபாயகரமாக இருக்கிறது. இந்திய அணியில் ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு பணியை சிறப்பாகச் செய்கிறார்கள்.

எனவே இந்திய அணிக்கு எதிராக நியூஸிலாந்து அணி ஆக்ரோஷமான பந்துவீச்சையும், ஆவேசமான துடுப்பாட்டத்தையும் வெளிப்படுத்தினால் மட்டுமே வெல்ல முடியும். தொடக்கத்திலேயே இந்தியாவின் துவக்க வரிசை விக்கெட்டுகளை வீழ்த்தி அவர்களுக்கு நெருக்கடி தர வேண்டும்.

ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி விக்கெட்டை ஆரம்பத்திலேயே வீழ்த்தாவிட்டால் நியூஸிலாந்து அணிக்கு அது பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.

கேன் வில்லியம்ஸனுக்கு இந்திய வீரர்களின் பலவீனம், பலம் தெரியும். அதற்கு ஏற்றார்போல் திட்டமிட்டு, வீரர்களைத் தெரிவு செய்ய வேண்டும்” என வெட்டோரி கூறியுள்ளார்.

இதையும் படியுங்க :   இங்கிலாந்துக்கு வெற்றி - தொடரையும் கைப்பற்றியது

Related Posts

About The Author

Add Comment