மனைவியுடன் நேரத்தை செலவழித்து டென்ஷனை குறைத்துக் கொள்கிறார் கேப்டன் விராட் கோலி. “இந்த ரணகளத்திலேயும் ஒரு கிளுகிளுப்பு “

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தனது மனைவியுடன் நேரத்தை செலவழித்து டென்ஷனை குறைத்துக் கொள்கிறார் கேப்டன் விராட் கோலி.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவை கடந்த 2017 ஆம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்துக் கொண்டார். காதலிக்கும் போதே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்த இந்த காதல் ஜோடி திருமணத்திற்கு பிறகு சர்ச்சைகளுக்கு ஓய்வு கொடுக்கவில்லை.

விராட் கோலி விளையாடும் போட்டிகளில் மைதானத்துக்கு நேரில் வந்து அனுஷ்கா அவரை உற்சாகப்படுத்துவதில் தொடங்கி, செல்லும் இடங்களுக்கெல்லாம் கோலி அனுஷ்காவை அழைத்து செல்வது வரை ஏகப்பட்ட பேச்சுகள்.

ஆனால், எந்த ஒரு இடத்திலும், சர்ச்சைகளிலும் கோலி, அனுஷ்காவை விட்டுக் கொடுத்தது இல்லை.அந்த வகையில் இந்த ஜோடியின் மீது படாத கண்களே இல்லை. தற்போது இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் ஆடி வருகிறது. இதுவரை 5 முறை உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு சென்ற இந்திய அணி 2முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இந்த முறை இந்திய அணி கண்டிப்பாக உலகக்கோப்பையை கைப்பற்றும் என்ற நம்பிக்கையுடன் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இங்கிலாந்தில் கடும் பயிற்சியில் ஈடுப்பட்டுள்ள இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் முனைப்பில் முழு வீச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறது.

 

View this post on Instagram

 

Good Morning 😍

A post shared by Anushka Sharma FC ❥ (@anushkafcs) on


இதற்கிடையில், தனது மனைவியுடன் நேரத்தை செலவழித்து டென்ஷனை குறைத்துக் கொண்டுள்ளார் கேப்டன் விராட் கோலி. இங்கிலாந்து நகரை தனது காதல் மனைவியுடன் சுற்றிப்பார்ப்பதும், ரசிகர்களுடன் செல்பி எடுப்பதும் என இவர்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதைப்பார்த்த ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ் இது தான்.. ” இந்த ரணகளத்திலேயும் உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு”

இதையும் படியுங்க :   சாமுவெல்ஸ் சொல்லும் கண்ணீர் கதை...

Related Posts

About The Author

Add Comment