தமிழ் அரசியல் கைதிகள் இருவர் மீண்டும் உண்ணாவிரதம்

அனுராதபுரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இருவர் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர்.

இவர்கள் இருவரும் நேற்று பகல் முதல் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறுகின்றது.

தம்மீதான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தக் கோரி அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

அவர்களின் கோரிக்கைள் குறித்து உரிய அதிகாரிகளை தெளிவுபடுத்தியுள்ளதாக துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

இதேவேளை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி தமிழர் விடுதலை கூட்டணி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

இந்நிய-இலங்கை உடன்படிக்கைக்கு அமைவாக அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று அந்தக் கட்சியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.

இதையும் படியுங்க :   காணாமல் போனோர் அலுவலகம் எதற்காக? மஹிந்த கேள்வி

Related Posts

About The Author

Add Comment