அடேங்கப்பா!தானாக அழியும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி வாட்ஸ் ஆப்பில்

பல மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள குறுஞ்செய்தி அப்பிளிக்கேஷனான வாட்ஸ் ஆப்பில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதாவது குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்பட்டு குறித்த நேரத்தில் பின்னர் தானாக அழியக்கூடிய வசதியாகும்.


இப் புதிய வசதி தற்போது சோதனை முயற்சியில் காணப்படுகின்றது.

இதேவேளை வாட்ஸ் ஆப் செயலியின் புதிய பதிப்பான 2.19.275 இல் இவ் வசதி உள்ளடக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் காத்திரமான தகவல்களை பரிமாற விரும்புவர்களுக்கு இவ் வசதி பெரிதும் உதவிகரமானதாக இருக்கும்.

இதேபோன்ற வசதி ஏற்கனவே டெலிகிராம் மெசேஜ் அப்பிளிக்கேஷனிலும், ஜிமெயில் மின்னஞ்சல் சேவையிலும் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க :   Outlook இன் புதிய பதிப்பில் அதிரடி வசதி (வீடியோ இணைப்பு)

Related Posts

About The Author

Add Comment