இந்தியர்கள் ஆண் குழந்தையை மட்டும் விரும்புவதற்கான காரணங்கள் என்ன ?

 

ஆண் குழந்தைகள் மீதான ஆசை

ஆண் குழந்தைகள் மீதான ஆசை

குறைந்தது ஒரு ஆண் குழந்தையாவது இருக்க வேண்டும் என்ற எண்ணம் கிட்டதட்ட அனைவரின் இல்லத்திலும் இருக்கிறது. ஆண் குழந்தை பிறக்கும் வரை தொடர்ந்து குழந்தைகளை பெற்றுக்கொண்டே இருக்கும் நடைமுறையையும் நாம் நிறைய பார்த்திருப்போம். லான்செட் என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி பணக்கார மற்றும் அதிகம் படித்த குடும்பங்களில் கூட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

பெண் குழந்தைகள்

பெண் குழந்தைகள்

இந்த சமூகம் எப்பொழுதும் பெண் குழந்தைகளின் பிறப்பைக் காட்டிலும் ஆண் குழந்தைகளின் பிறப்பை அதிக மகிழ்ச்சியாக பார்க்கிறது. ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் இல்லத்தில் பெரும்பாலும் இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாக இருப்பதை விரும்பவில்லை. இதனால்தான் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவது தடைசெய்யப்பட்டது.

உயர் பாலினம்

ஆண் குழந்தைகள் ‘உயர்ந்தவர்’, ‘அமைதியானவர்’, ‘அதிக விவேகமானவர்’, ‘நம்பகமானவர்’, ‘சம்பாதிப்பவர்கள்’ என்று நம்பப்படுகிறது. ஆகவே இயற்கையாகவே சமூகம் ஆண் குழந்தையை ‘உயர்ந்த’ குழந்தையாக பார்க்கிறது. ஆனால் இவை அனைத்தையும் பெண் குழந்தைகளும் செய்கிறார்கள். இந்த சமூகம் ஏன் ஆண் குழந்தையை அதிகம் விரும்புகிறது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

 

ஆண் என்பது சொத்து

ஆண் என்பது சொத்து

ஒரு பெண் திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறுவாள், எனவே உங்கள் வயதான காலத்தில் ஆதரவைக் எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஆண் குழந்தை தன் வீட்டின் சொத்து என்று சமூகம் கருதுகிறது. ஆனால் ஆண் குழந்தைகளை பெற்றவர்கள்தான் இன்று முதியோர் இல்லத்தில் அதிகம் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்

பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்

பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எனவே அவர்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியமாகிறது. இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 40 சதவீதமாகும். இந்த சூழ்நிலையில் அவர்களால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் சுமையையும் சுமக்க முடியாது என்று மக்கள் கருதுகிறார்கள்.

பெண்கள் வேறு ஒருவருக்கு சொந்தமானவர்கள்

பெண்கள் வேறு ஒருவருக்கு சொந்தமானவர்கள்

பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும்போது அவர்கள் வேறு ஒரு குடும்பத்திற்கு சொந்தமாகி விடுகிறார்கள். அவர்கள் தங்கள் புது உறவுகளின் மீது அக்கறை செலுத்து தொடங்கிவிடுவார்கள். இந்த சூழ்நிலையில் தங்களை மகன்தான் பார்த்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறார்கள். எனவே பெண்கள் தங்களுக்கு சொந்தமானவர்கள் அல்ல என்னும் எண்ணம் அவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் களஎதார்த்தம் என்பது இதற்கு எதிர்மறையாக இருக்கிறது.

இதையும் படியுங்க :   30 நிமிடங்கள் தலையணை இல்லாமல் தினமும் படுத்திருந்தால் . . .

 

மகன் இல்லை என்றால் சொர்க்கம் இல்லை

மகன் இல்லை என்றால் சொர்க்கம் இல்லை

இந்திய சமூகத்தில் வேரூன்றி இருக்கும் கருத்து தங்கள் இறந்த பிறகு இறுதி சடங்குகளை செய்யப்போவது ஆண் குழந்தைகள்தான். இறுதி சடங்குகள் செய்தால் மட்டுமே இறந்தவர்கள் சொர்க்கத்திற்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் பெண்களுக்கு சுடுகாட்டிற்கு செல்லும் உரிமை கூட இல்லை. மகன் இல்லை என்றால் கணவர், சகோதரன், மருமகன் போன்றோர் செய்யலாமே தவிர பெண்கள் ஒருபோதும் அதனை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. ஆண் குழந்தைகள் அதிகம் வரவேற்கப்படுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.

பெண் குழந்தைகள் அவமானத்தை ஏற்படுத்தக்கூடும்

பெண் குழந்தைகள் அவமானத்தை ஏற்படுத்தக்கூடும்

பெண் குழந்தை வளர்ப்பில் ஏதாவது தவறு ஏற்பட்டுவிட்டால் அது தங்களின் குடும்பத்திற்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பெற்றோரார்கள் அஞ்சுகிறார்கள். ஏனெனில் நமது நாட்டில் ஆண் குழந்தைகள் எதை செய்தாலும் தவறில்லை என்ற மோசமான கருத்தியல் உள்ளது. தங்களுடைய வளர்ப்பு மீது நம்பிக்கை இல்லாதவர்கள்தான் இதை காரணமாக கூறுவார்கள்.

முதலீடு வீண்

முதலீடு வீண்

பெண் குழந்தை வெறுப்பில் பொருளாதாரம் முக்கியமானப் பங்கை வகிக்கிறது. மகன் வயதான காலத்தில் கவனித்துக் கொள்வதன் மூலம் செலவழித்த பணத்தை திரும்ப செலுத்துவான், ஆனால் பெண் குழந்தைக்காக செல்வழிக்கப்பட்ட பணம் வீண்தான் என்று நினைக்கிறார்கள். மேலும் இந்தியாவின் பல பகுதிகளில் வரதட்சணை வாங்கும் பழக்கம் இன்றும் உள்ளது. இது அவர்களுக்கு வருமானம்தான், அதுவே பெண் குழந்தை என்றால் தாங்கள் வரதட்சணை கொடுக்க வேண்டும் என்று பல பெற்றோர்கள் அஞ்சுகிறார்கள்.

 

தவறான திருமணம்

தவறான திருமணம்

ஒரு பெண்ணுக்கு திருமண வாழ்க்கை சரியாக அமையாவிட்டால் அவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவாகும். மோசமான திருமண வாழ்க்கையில் இருந்து வெளியே வருவது குடும்பத்திற்கு அவமானமாக கருதப்படுகிறது. இதனாலேயே பல பெண்கள் தங்கள் மோசமான திருமண வாழ்க்கையை சகித்துக் கொள்கிறார்கள்.

Source : Boldsky

Related Posts

About The Author

Add Comment