யாழில் விபத்து – இரு இளைஞர்கள் பலி

யாழ். தெல்லிப்பளை யூனியன் சந்திப் பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சாவற்காடு – ஆணைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் புவிந்தன் (வயது 21) மற்றும் அரியரட்ணம் அபிராஜ் (வயது 19) ஆகிய இருவருமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

கோயிலுக்கு சென்று, மீண்டும் அதிவேகத்துடன் திரும்பிக் கொண்டிருந்த இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இருவரின் சடலம் தற்போது தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்க :   வடக்கில் 5 மாதத்தில் மட்டும் 558 கிலோ கஞ்சா சிக்கியது: சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்

Related Posts

About The Author

Add Comment