யாழில் அவுஸ்ரேலிய தூதுவர்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கான அவுஸ்திரேலியா தூதுவர் பீறீன் கஸ்சன் உள்ளிட்ட  ஐவர் அடங்கிய குழுவினர்கள் நேற்று(16) யாழ். மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.

யாழ். மாவட்டத்தில்  அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு விஜயம் செய்த குறித்த குழுவினர் வடமாகாண ஆளுநர்  ரெஜினோல்ட் குரேவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்திப் பணிகள், மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கு உதவிகளையும், ஆலோசனைகளையும்  வழங்க அவுஸ்திரேலியா அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான அவுஸ்ரேலியா தூதுவர் பீறீன் கஸ்சன்  தெரிவித்தாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

தொடர்ந்து யாழ் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்திருந்த தூதுவர் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடினார்.

அவுஸ்ரேலிய அரசின் நிதியுதவியில் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று (17)வடமாகாண முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்த இக்குழுவினர் வடக்கின் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

[b]BPK/SPR_dmu_jaffna[/b]

இதையும் படியுங்க :   முன்னாள் காதலிக்கு இரண்டு பிள்ளைகள் : காதலன் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி

Related Posts

About The Author

Add Comment