எச்சரிக்கை Zoom App : முடிந்தால் Uninstall செய்யவும் அல்லது “இதை” செய்யவும்!

ஸூம் (Zoom) வீடியோ கான்பரன்சிங் தளமானது மீண்டும் சிக்கலில் உள்ளது, இம்முறை அதைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என்று இந்திய அரசு கூறியுள்ளது மற்றும் அதை பயன்படுத்த வேண்டாம் என்றும் பரிந்துரை செய்துள்ளது.

ஏனெனில் இந்திய உள்துறை அமைச்சகம் ஸூம் ஆப்பை பாதுகாப்பற்ற ஒன்றாக கருதுகிறது.

யாரெல்லாம் பயன்படுத்த கூடாது?

இது தொடர்பாக வெளியான இரண்டு பக்க நீள ஆவணமானது, ஸூம் ஆப்பை அரசாங்க அலுவலகங்கள் / அதிகாரிகளால் உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படக்கூடாது எனும் வலியுறுத்துகிறது.

மேலும் இது தனிநபர்களால் அவர்களின் தனிப்பட்ட திறனின் கீழ் பயன்படுத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அவ்வாறு செய்ய விரும்பினால், அவர்கள் சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.

 

என்னென்ன சிக்கல்கள் ஏற்படும்?

கான்பிரன்ஸ் ரூமில் அங்கீகரிக்கப்படாத நுழைவைத் தடுக்க, அங்கீகரிக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் கான்பிரன்ஸின் பிற முனையங்களில் தீங்கிழைக்கும் செயல்களைத் தடுக்க, கடவுச்சொற்கள் மற்றும் அணுகல் மானியங்கள் மூலம் பயனர்களை கட்டுப்படுத்தி DOS (Denial-of-service attack) தாக்குதலைத் தவிர்க்க சில பாதுகாப்பு நடைமுறைகளையும் பட்டியலிட்டுள்ளது.

 

என்னென்ன பாதுகாப்பு நடைமுறைகள்?

– ஒவ்வொரு மீட்டிங்கிற்கு புதிய யூஸர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை அமைக்க வேண்டும்.

– வெயிட்டிங் ரூமை இயக்க வேண்டும். இதனால் மீட்டிங்கை நடத்தும் ஹோஸ்ட்ஒப்புக் கொள்ளும்போது மட்டுமே ஒருவரால் நுழைய முடியும்

இதையும் படியுங்க :   167 டொலர் விலையில் விற்பனைக்கு வருகிறது Lenovo K5 Note ஸ்மார்ட்கைப்பேசி!

Related Posts

About The Author

Add Comment