எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 21 மாவட்டங்களில் ஊரடங்கு நீக்கம்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 21 மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும் கொரோனா வைரஸ் அபாய வலயமாக உள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படாது என்றும் அரச தகவல்கள் கூறுகின்றன.

ஏனைய மாவட்டங்களில் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகின்ற காலத்திற்குள் மாவட்டத்திலிருந்து இன்னுமொரு மாவட்டத்திற்கு பிரவேசிப்பது, நிகழ்வுகள் நடத்துவது, பொதுமக்கள் சந்திப்புக்களை செய்வது என்பது தடை செய்யப்படும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்க :   முன்னாள் அமைச்சர் பெண்ணை மடக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்

Related Posts

About The Author

Add Comment