கொரோனா வைரஸால் உயிருக்கு போராடிய லண்டன் பெண்ணை காப்பாற்றிய தமிழ் சித்த மருத்துவர்! வெளியிட்ட ஆதார ஓடியோ

லண்டனில் கொரோனா வைரஸால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை தன்னுடைய மருந்து காப்பாற்றியுள்ளதாகவும், இதை உலகசுகாதார அமைப்பு போன்றவை கவனத்தில் கொண்டு, அந்த மருந்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தமிழகத்தை சேர்ந்த சித்த மருத்துவர் தணிகாசலம் கெஞ்சி கேட்டுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் உள்ளது. இந்த வைரஸ் காரணமாக தற்போது வரை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வைரஸ் பரவல் ஆரம்பித்த போதே, கடந்த ஜனவரி மாதத்தின் கடைசியில், தமிழகத்தை சேர்ந்த சித்த மருத்துவர் தணிகாசலம் தன்னிடம் இதற்கான மருத்து இருப்பதாக கூறினார். அப்போது அது தமிழ் ஊடகங்களில் இது பரபரப்பாக பேசப்பட்டது.

கொரோனாவிற்கு எதிரான போரில் பலர் தன்னுடைய மருந்தினை சாப்பிட்டு குணமடைந்துள்ளதாக, அவர் தொடர்ந்து சில வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

 

இந்நிலையில், தற்போது இவர் லண்டனில் கொரோனா வைரஸ் காரணமாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை காப்பாற்றியுள்ளார். அது குறித்து லண்டனில் இருக்கும் அந்த பெண்ணே பேசும் ஆடியோவை ஆதரமாக வெளியிட்டுள்ளார்.

வீடியோ மற்றும் ஓடியோவை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்…

அதில் பேசும் அந்த பெண், என்னுடைய பெயர் சிந்து. நான் லண்டனில் வசித்து வருகிறேன். என் வீட்டில் கணவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறினர். அதன் பின் மூன்று நாட்களுக்கு பிறகு எனக்கு நெஞ்சு வலி, காய்ச்சல், தூக்கமின்மை, நடக்க கூட முடியாமல் எதுவுமே செய்ய முடியாத சூழ்நிலையில் இருந்தேன்.

இதனால் நான் ஆம்புலன்சிற்கு போன் செய்தேன், வந்தார்கள். எல்லாமே சோதித்த அவர்கள் சரியாக இருக்கிறது என்று விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

அதற்கு அடுத்த நாளும் உடல்நிலை சரியில்லாமல் போனது, இதனால் மீண்டும் போன் செய்த போது, ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டும் என்று கூறினர்.

அதன் பின் செக் செய்துவிட்டு, தேவையில்லை என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர். சாகும் வலியில் இருந்தேன்.

இறந்துவிடுவேன் என்று தான் நினைத்தேன், அப்போது தான் என்னுடைய நண்பர் ஒருவர் தணிகாசலம் ஐயா அவர்களின் போன் நம்பரை கொடுத்தார்.

என் சகோதரர், அவரை தொடர்பு கொண்டு பேசினார். உடனே லண்டனில் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று மருந்து எடுக்க சொன்னார். இரண்டு மணி நேரத்தில் நாங்கள் சென்று மருந்து எடுத்துவிட்டோம்.

மருந்து எடுத்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது, இப்போது நெஞ்சு வலி வரவில்லை, 80 சதவீதம் மூச்சி என்னால் நன்றாக விட முடிகிறது. முன்பு நான் இருந்த நிலைக்கும், இப்போது இருக்கும் நிலைக்கும் வித்தியாசம் தெரிகிறது.

இதையும் படியுங்க :   இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அவரின் மருந்து எனக்கு மிகவும் உதவியது. இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன், தணிகாசலம் அவர்களுக்கு என்னுடைய நன்றி என்று உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும், இந்த நோயாளி குறித்த தகவல்களை, உலக சுகாதார நிறுவனமோ அல்லது லண்டனில் இருக்க கூடிய மருத்துவ நிறுவனங்களோ, இல்லை அமெரிக்க அதிபர் டிரம்ப் யார் கேட்டாலும், இந்த நோயாளி சார்ந்த குறிப்புகள் மற்றும் அடையாளங்களை கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இதனால் மருந்தே இல்லை, மருந்தே இல்லை என்று உலகத்தை ஏமாற்றாதீர்கள், 12 முதல் 24 மணி நேரத்தில் இந்த நோயில் இருந்து குணமடைய முடியும் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன், உலக சுகாதார அமைப்பு ஏன் இதை கண்டு கொள்ளவே மாட்டிங்குது என்று தெரியவில்லை என்ற ஆதங்கத்தையும், குற்றச்சாட்டையும் தணிகாசலம் முன் வைத்துள்ளார்.

Related Posts

About The Author

Add Comment