இலங்கையில் குருநாகல் மாவட்டம் நிக்கவரட்டிய மறு அறிவித்தல் வரை முற்றாக மூடக்கம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் இலங்கையில் மற்றுமொரு நகரம் மறு அறிவித்தல் வரை முற்றாக மூடப்பட்டுள்ளது.

இதன்படி குருநாகல் மாவட்டம் நிக்கவரட்டிய நகரமே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள பெண் ஒருவரது கணவர் கம்பஹா, வெலிசற கடற்படை முகாமில் பணியாற்றிவருவதோடு அவர் ஊடாக பெண்ணுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

அத்துட்ன் தொற்று ஏற்பட்டப் பெண் நகரின் பல இடங்களுக்கும் சென்றுள்ளதோடு இதனால் வைரஸ் பலருக்கும் பரவியிருக்கலாம் என்ற அச்சம் நிலவிவருகின்றது.

இதன் காரணமாக குறித்த நகரம் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க :   தொடங்கொடையில் சடலம் மீட்பு

Related Posts

About The Author

Add Comment