யார் அந்த முன்னணி நடிகரின் மகள்..? சிக்கிய காசியின் லேப்டாப் – பரபரக்கும் கோலிவுட்.!

நூற்றுக்கணக்கான பெண்களுடன் பழகி அவர்களுடன் தனிமையில் இருக்கும் வீடியோக்களை காசியின் செல்போனில் இருந்து போலீசார் கைப்பற்றி உள்ளனர். ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண் டாக்டர், என்ஜினர் காசி மீது புகார் தந்த நிலையில் மேலும் ஒரு பெண் புகார் தந்துள்ளார். காசியால் ஏமாற்றப்பட்டவர்களில் நடிகரின் மகளும் ஒருவர் அடக்கமாம். அவர் யார் என்று தெரியவில்லை.


தன்னுடைய கோழிப்பண்ணையில் தான் அந்த வீடியோக்கள் நிறைந்த லேப்டாப்பை காசிமறைத்து வைத்துள்ளான். அந்த லேப்டாப் பாஸ்வேர்ட் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர். சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரை காதலித்து இவர் ஏமாற்றி இருக்கிறான். பேஸ்புக் மூலமாக அந்த பெண்ணுடன் நட்பான இவர் காதலித்து, அவரிடம் லட்ச லட்சமாக பணம் பறித்து ஏமாற்றி இருக்கிறான்.கல்லூரி படிக்கும் போதே சமூக வலைதளம் மூலம் பள்ளி, கல்லூரி என பல பெண்களுடன் பழகி நெருக்கமாக எடுத்துகொண்ட புகைப்படத்தையும், தனிமையில் எடுத்துக்கொண்ட வீடியோவையும் இணையதளத்தில் வெளியிடுவேன் என கூறி பலரையும் மிரட்டி நகை, பணத்தை பறித்துள்ளான்.

அவனால் பாதிக்கப்பட்ட டாக்டர் பெண் ஒருவர் கொடுத்த புகார் மற்றும் 2 பேர் என துணிச்சலாக கொடுத்த புகார் அடிப்படையில் போலிசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் விசாரணையில் உள்ளூர், வெளியூர் என குறிவைத்து வசதியான குடும்பத்து பெண்கள், பள்ளி மாணவிகள், செவிலியர்கள் என மடக்கி தன் வலையில் சிக்கவைத்து பணம் பறித்து சொந்தமாக 4 மாடி வீட்டை கட்டியுள்ளதும் தெரியவந்துள்ளது.

அத்துடன் இந்த சம்பவத்தில் காசியால் முன்னணி நடிகரின் மகள் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே பாடகி சின்மயியிடம் காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளதாகவும், தான் இது குறித்து பதிவிட்டுள்ளதாகவும் சின்மயி கூறியுள்ளார்.

காசி நாகர்கோவில் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று காசி நீதிமன்றத்துக்கு வந்த போது காவி வேட்டி மற்று நீல நிற சட்டை அணிந்திருந்ததோடு, முகத்தில் மாஸ்கும் அணிந்திருந்தான்.அவனை புகைப்படம் எடுத்த போது எந்த பதட்டமும் இன்றி போட்டோகிராபரை பார்த்து காதல் சின்னத்தை காசி காட்டியுள்ளான்.

இதையும் படியுங்க :   பிரபல நடிகரின் மகள் எப்போதும் இப்படி தான் செய்கின்றாராம்! வைரல் புகைப்படம்!

Related Posts

About The Author

Add Comment