மோதர கொழும்பில் பாண் விற்றவருக்கு கொரோனா – அப்போ வாங்கியவர்களுக்கும் சோதனையா…..?

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த பெண்ணின் கணவர் முச்சக்கர வண்டியில் பேக்கரி உணவுகள் விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இதுவரையில் கொரோனா நோயாளிகள் பதிவாகாத கொழும்பின் 4 இடங்களில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மோதர – மெத்சத வீட்டு தொகுதியில் பதிவாகிய 44 வயதுடைய பெண் ஐ.டி.எச் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த பெண் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க :   துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

Related Posts

About The Author

Add Comment