ஆய்வில் தகவல்!வைட்டமின்-டி குறைபாடு கொண்டவர்களின் உயிரைக் குடிக்கும் கொரோனா

வைட்டமின்-டி சத்து குறைபாடு கொண்டவர்களின் உயிரை அதிக அளவில் கொரோனா வைரஸ் காவு வாங்கியிருப்பது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.இதனிடையே கொரோனா எப்படிப்பட்டவர்களை தாக்குகிறது? என்பதை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை முறைகளை மாற்றி உயிரிழப்பை எவ்வாறு குறைப்பது என்பது குறித்த விரிவான ஆய்வுகளையும் விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் மற்றும் ராணி எலிசபெத் ஆஸ்பத்திரி பவுண்டேசன் டிரஸ்ட் ஆகியவை இணைந்து ஓர் ஆய்வு மேற்கொண்டிருக்கிறது. 20 ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றினால் பலியானவர்கள் பற்றிய இந்த ஆய்வில் எந்த குறைபாட்டினால் கொரோனா நோயாளிகள்கள் அதிகம் இறந்துள்ளனர் என ஆராய்ந்துள்ளனர்.இந்த ஆய்வின் முதல் கட்டத்தில் முடிவில் பெரும்பாலான கொரோனா நோயாளிகளுக்கு வைட்டமின்-டி சத்து குறைபாடு இருந்திருக்கிறது எனத் தெரியவந்துள்ளது. பின், கொரோனா நோயாளிகளுக்கு உடலில் வைட்டமின் டி சத்தை அதிகப்படுத்திப் பார்க்குமாறு மருத்துவர்களுக்குப் பரிந்துரை செய்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வைட்டமின் டி சத்து அதிகமாகக் கிடைத்தால் விரைவாக குணமடையும் கூடுதலாக இருக்கிறது. வைட்டமின் டி குறைபாடுதான் கொரோனா எளிதில் பாதிக்கக் காரணமாகவும் உள்ளது என இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.சூரிய ஒளியில் இருப்பதுதான் வைட்டமின் டி சத்தைப் பெற சிறந்த வழி. சூரை, காலா, கானாங் கெழுத்தி, சங்கரா போன்ற மீன்களிலும் வைட்டமின் டி சத்து இருக்கும். முக்கியமாக காலா மீனில் அதிகமாக இருக்கும். முட்டையின் மஞ்சள் கரு. ஆரஞ்சுப் பழம், தானியங்கள், சோயா, பாலாடை, காளான் முதலியவை மூலம் வைட்டமின் டி சத்து கிடைக்கும்.

இதையும் படியுங்க :   தனது இதயத்தை தானே புதைத்த பெண்…

Related Posts

About The Author

Add Comment