டாஸ்மாக் கடை திறப்பிற்கு பிறகு அரங்கேறிய வீர காரியம்..! மனிதன் கடித்து பாம்பு உயிரிழப்பு :

சாலையில் சென்று கொண்டிருந்த பாம்பை பிடித்து மதுபோதையில் கடித்தே கொன்ற சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸால் விதிக்கப்பட்ட ஊரடங்கு கர்நாடகாவில் நாளுக்கு நாள் தளர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 4-ம் தேதி முதல் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் விதிகளை மறந்து கூட்டம் கூட்டமாக சென்று மதுபாட்டில்களை வாங்கி வரும் நிகழ்வுகள் சமூக வலைதளங்களிலும், செய்திகளிலும் உலா வருவதை கண்டிருப்போம்.

40 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட மதுக்கடையினால், மதுப்பிரியர்கள் சரக்குகளை குடித்து தங்களை குஷிபடுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கோலார் மாவட்டத்தில் கடையில் மது அருந்திவிட்டு குடிமகன் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது வாகனத்தின் குறுக்கே பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனைக் கண்ட அந்த நபர், வாகனத்தை ஓரங்கட்டி விட்டு, பாம்பை பிடித்து சரமாரியாக கடித்தே கொன்றுள்ளார்.

மேலும், பாம்பு என்னை கடிப்பதற்கு முன்பாக, நான் பாம்பை கடித்துக் கொன்று விட்டேன் போதையில் அந்த நபர் உளறிக் கொண்டே சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்க :   16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை... கிழவனின் காமவெறி

Related Posts

About The Author

Add Comment