இன்று முதல் இயக்கப்படும் சென்னை மாநகர பேருந்துகள்: யாருக்காக தெரியுமா?

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைகிறது. இந்த ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் நாளை முதல் தமிழகத்தில் அரசு அலுவலங்கள் அனைத்தும் செயல்படும் என்றும் 50 சதவீத ஊழியர்கள் மட்டும் பணி புரியலாம் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவதற்கு வசதியாக சென்னையில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது

இந்த மாநகர பேருந்துகள் தலைமைச் செயலக ஊழியர்கள் உள்பட அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது சொந்த செலவில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து சென்னையில் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் இந்த பேருந்துகளில் அரசு ஊழியர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பயணம் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சென்னையில் கிட்டத்தட்ட அனைத்து கடைகளும் திறந்து விட்டதால் தற்போது பேருந்துகளும் இயங்க தொடங்கி விட்டால் கிட்டத்தட்ட சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் படியுங்க :   கள்ளக்காதலி வீட்டில் கணவர் உல்லாசம்... அறையிலேயே புகுந்து புரட்டி எடுத்த மனைவி..!

Related Posts

About The Author

Add Comment